- தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
- கொழுப்புச் சத்து, மாவுச் சத்து அதிகம் உள்ள உணவைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.
- காபி, டீ அதிகம் குடிக்கக் கூடாது.
- பச்சைக் காய்கறிகள், கீரை, பழ வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
- இரவு உணவை 8 மணிக்குச் சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அப்படி சாப்பிட முடியாதவர்கள் இரவு உணவை பச்சைக் காய்கறிகள், பழங்கள் என மாற்றிக் கொள்ளவேண்டும்.
- படுக்கைக்குச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னரே இரவு உணவை முடித்துக்கொள்ளவேண்டும்.
- இனிப்பு, புளிப்பு உள்ள உணவு வகைகளைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.
- தினமும் 30 முதல் 45 நிமிஷங்கள் வரை நடைப்பயிற்சி செய்யவேண்டும்.
- முடிந்த அளவு பகலில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
- ஃபாஸ்ட்ஃபுட், ஐஸ்கிரீம், சாக்லேட் உள்ளிட்ட நொறுக்குத் தீனி அதிகம் கூடாது.
எடை கூடாமல் இருக்க...
22:55 News Portal Labels: Health

