Feed

Showing posts with label Health. Show all posts
Showing posts with label Health. Show all posts

போதை மருந்தைவிட மது மோசம்

ஹெரொயின் மற்றும் கொக்கெயின் போன்ற போதை மருந்துகளை விட மதுபானம் ஏற்படுத்தும் பாதிப்புத்தான் அதிகம் என்று பலராலும் மதிக்கப்படுகின்ற த லான்செட் மருத்துவ சஞ்சிகை கூறுகிறது.
சமூக மட்டத்தில் மதுவின் பாதகந்தான் அதிகம்

போதை மருந்துகளால் தனி நபர்களுக்கு மாத்திரமல்லாமல், பரந்துபட்ட சமூகத்துக்கே ஏற்றபடக் கூடிய ஆபத்துக்களை அளவிடுவதற்கான புதிய மதிப்பீட்டு முறை ஒன்றை ஆய்வாளர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். 

மதுபான பாவனை பாதக விளைவுகள் குறித்து இங்கு பிரிட்டிஷ் சமூகத்தில் பல விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், இந்த அறிக்கை இந்த விவகாரத்தை மேலும் ஒரு படி முன்னே கொண்டு செல்கிறது. 

கொக்கெயின் மற்றும் ஹெரோயின் ஆகியவற்றினால் சமூகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பை விட மதுபானம் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று இந்த அறிக்கை கூறுகிறது.


சுகாதார ரீதியாகவும், குற்றவியல் ரீதியாகவும், பொருளாதர ரீதியாகவும் 16 வகையிலான பாதகத்தை ஏற்படுத்தும் 20 போதைப் பொருட்களை பட்டியலிட்டபோது, அதில் மது 72 புள்ளிகளையும், ஹெரோயின் 55 புள்ளிகளையும், முகரும் கொக்கெயின் 54 புள்ளிகளையும் பெற்றன. 

ஒரு தனி நபரின் சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பட்டியலில் வது மது நான்காவது மோசமான மூலமாக இருக்கிறது. ஆனால் அந்த அறிக்கையின் முடிவு, மதுபானம் தான் பரந்துபட்ட சமூக மட்டத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதை பிரதிபலிக்கின்றது. 

இந்தத அறிக்கையை தயாரித்துள்ள முக்கியமானவர்களில் ஒருவர் பிரிட்டிஷ்
அரசாங்கத்தின் போதைப்பொருள் குறித்த முன்னாள் ஆலோசகரான பேராசிரியர் டேவிட் நட். போதைப்பொருள் குறித்த கொள்கைகள் பற்றிய வெளிப்படையான விமர்சனங்களை முன்வைத்ததற்காக ஒரு வருடத்துக்கு முன்னதாகவே பதவி நீக்கம் செய்யப்பட்டார். 

பிரிட்டனில் போதைப்பொருட்கள் குறித்த சட்டங்கள் காலாவதியானவை என்று அவர் கூறுகிறார். இந்த ஆய்வின் கண்டுபிடிப்புக்களை அரச கொள்கையாக்கத்தின் போது கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார். 

ஆனால், இந்தக் கருத்துடன் மாறுபடுபவர்கள் இந்த ஆய்வு ஒரு போலி விஞ்ஞானம் என்று விபரிக்கிறார்கள். அந்த போதைப் பொருட்களின் பட்டியலில் இருப்பவற்றில் மது மாத்திரமே சட்டபூர்வமான போதை மருந்து என்பதால், அது சமூகத்தில் பரந்துபட்ட அளவில் பெரும்பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற முடிவில் எந்தவிதமான ஆச்சரியமும் கிடையாது என்று அவர்கள் கூறுகிறார்கள். 

லண்டனில் உள்ள மதுபானக் கடைகளில் மது அருந்துபவர்கள் கூட இந்த ஆய்வின் முடிவு குறித்து திருப்தி அடையவில்லை.

எதிர்காலத்தில் இந்த விடயம் குறித்து மேலும் விவாதங்கள் தொடர்வதற்கு தற்போதைய விவாதம் மிகவும் முக்கியமானது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பிரிட்டனை விட அரைவாசியளவுக்கே மது அருந்தப்படுகின்ற ஸ்வீடன் போன்ற நாடுகளிடம் இருந்து பிரிட்டன் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கிறன. 

அரசாங்கம் இந்த விடயத்தில் புதுமையான அணுகுமுறையை கைக்கொண்டால் தான் அது முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

எடை கூடாமல் இருக்க...


  • தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
  • கொழுப்புச் சத்து, மாவுச் சத்து அதிகம் உள்ள உணவைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.
  • காபி, டீ அதிகம் குடிக்கக் கூடாது.
  • பச்சைக் காய்கறிகள், கீரை, பழ வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
  • இரவு உணவை 8 மணிக்குச் சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அப்படி சாப்பிட முடியாதவர்கள் இரவு உணவை பச்சைக் காய்கறிகள், பழங்கள் என மாற்றிக் கொள்ளவேண்டும்.
  • படுக்கைக்குச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னரே இரவு உணவை முடித்துக்கொள்ளவேண்டும்.
  • இனிப்பு, புளிப்பு உள்ள உணவு வகைகளைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.
  • தினமும் 30 முதல் 45 நிமிஷங்கள் வரை நடைப்பயிற்சி செய்யவேண்டும்.
  • முடிந்த அளவு பகலில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
  • ஃபாஸ்ட்ஃபுட், ஐஸ்கிரீம், சாக்லேட் உள்ளிட்ட நொறுக்குத் தீனி அதிகம் கூடாது.

இதயத்தை இரும்பாக்கும் மீன்!

காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில் இல்லாத சத்துக்களே இல்லை தானே. ஆனாலும், அசைவ உணவை எடுத்துக் கொண்டால், மீன் உணவில் இருக்கும் "ஒமேகா 3 ஃபேட் ஆசிட்(Omega-3 Fatty Acids)" என்பது அரிய மருத்துவ குணம் வாய்ந்தது.

உலகம் முழுக்க உள்ள மருத்துவ நிபுணர்கள், இதை சொல்லி வருகின்றனர். வாரத்துக்கு ஒரு முறையோ, இரு முறையோ சாப்பிட்டால் கூட போதும், இருதயம் இரும்பாகத்தான் இருக்கும். இருதய பாதிப்பு கூட பயந்து ஓடிவிடும்.

சிறிய வயதில் ஆஸ்துமா உள்ளவர்கள், மீன் சாப்பிட்டால், ஆஸ்துமா பறந்துவிடும். மீன் உணவுகளை எப்படி சாப்பிட்டாலும், அதன் மருத்துவ குணம் போய் விடுவதில்லை. எந்த வகை கேன்சரும் வராமல் பாதுகாக்கும். ரத்த அடைப்பு, ரத்த ஓட்டம் பாதிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. மூளை, கண்களுக்கு மிக நில்லது.

வயதானவர்களுக்கு அல்சீமர்ஸ்(Alzheimer"s) உட்பட மறதி நோய் வரக்கூடும். அதை தடுக்க மீன் உணவு தான் நல்லது. சர்க்கரை நோய், டிப்ரஷன்(Depression) உள்ளவர்களுக்கும் மீன் உணவு தான் நல்லது.

எந்த வகை மீனிலும், 500 மில்லி கிராம் முதல் 1500 மில்லி கிராம் வரை ஒமேகா 3 ஃபேட் ஆசிட்(Omega-3 Fatty Acids) உள்ளது. ஆனால், நம் உடலுக்கு தேவை, 200 முதல் 600 மில்லிகிராம் வரை தான். அதனால் வாரம் ஒரு முறை மீன் உணவு சாப்பிட்டால் கூட நல்லது தான். மீன் எண்ணெய் தோய்த்த இரண்டு பிரெட் துண்டில் 27 மில்லி கிராம், மீன் எண்ணெய் தோய்த்த முட்டையில் 200 மில்லி கிராம், தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால், அதில் 40 மில்லி கிராம் என்ற அளவில் ஒமேகா ஆசிட் உள்ளது.

கேப்சூலை விட...

இப்போதெல்லாம் எதற்கும் மாத்திரையை விழுங்குவது தான் பேஷனாகி விட்டது. மீன் என்றாலே, ஙே...என்று விழிக்கும் சைவ உணவினர் பலரும், இருதய பலத்துக்காக, ஒமேகா 3 ஃபேட் ஆசிட்(Omega-3 Fatty Acids) உள்ள கேப்சூல் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகின்றனர்.

ஆனால், இதில் ஒமேகா ஆசிட் சத்துக்கள் இருக்கிறது என்றாலும், இதை விட மீன் உணவில் தான் பல மடங்கு ஒமேகா ஆசிட் உள்ளது. அதனால், மீன் உணவு சாப்பிடுவது தான் நல்லது.

பிறந்த குழந்தைகள் சில, உரிய வயது ஆகியும் நடக்காது. அதுபோல சரிவர பேச்சு வராது. அப்படியிருக்கும் குழந்தைகளுக்கு மீன் உணவு மிக நல்லது. நல்ல பலன் கிடைக்கும். தசைகள், மூட்டு வலி போன்றவற்றுக்கும் மீன் நல்ல மருந்து.

மற்ற உணவு வகைகளை விட, மீனில் தான் அதிகமான மெர்க்குரி என்ற பாதரசம் உள்ளது. இது உடலுக்கு கெடுதல். ஸ்வார்டு பிஷ், மர்லின் ரே, ஜெம் பிஷ், லிங், ஆரஞ்சு ரக்பி, சதர்ன் ப்ளூ பிஷ் போன்ற மீன்களில் பாதரசம் அதிகம் உள்ளது.

அதனால், அதிகமாகவும் மீன் உணவு சாப்பிடுவது என்பதும் சரியல்ல. மேலும், அசுத்த தண்ணீரில் மீன் பிடித்து அதை உணவாக சமைத்து சாப்பிடுவதால் பயனில்லை. மீன்(Fish) உணவு சமைக்கும் போது, அதன் அடர்த்தியான பாகங்களை வேக வைக்கும் போது, ஒரு சென்டிமீட்டர் அடர்த்தி என்றால், மூன்று முதல் நான்கு சென்டிமீட்டர் வரை அடர்த்தி உள்ள பாகத்தை 20 நமிடம் வரை வேக வைக்க வேண்டும். அப்போது தான் நல்லது.

மலேரியாவால் மரணமடைவோர் அதிகம்!

கொசுக்களால் மலேரியா பரவுகிறது
கொசுக்களால் மலேரியா பரவுகிறது
இந்தியாவில் மலேரியாவில் பலியாவோரின் எண்ணிக்கையானது மிக குறைவாக மதிப்பீடப்பட்டுள்ளதாக புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. ‘ தி லான்செட்’ மருத்துவ சஞ்சிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆண்டுக்கு சுமார் இரண்டு லட்சம் பேர் மலேரியாவால் இந்தியாவில் பலியாவதாக கூறியுள்ளது. இது உலக சுகாதார அமைப்பு கூறும் எண்ணிக்கையை விட பதிமூன்று மடங்கு அதிகம்.


அறிக்கையில் பலியானவர்களில் 90 சதவீதம் பேர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் 86 சதவீதம் பேர் மருத்துவ கவனிப்பு இல்லாமல் வீட்டிலேயே பலியாகிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதாவது தற்போது உலக சுகாதார அமைப்பு கூறி வரும் எண்ணிக்கை என்பது நம்ப கூடியது அல்ல என்றும், அந்த எண்ணிக்கையானது மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் தெரிவிக்கப்படுகின்றது என்றும் அறிக்கை கூறுகிறது.


ஆனால் ‘தி லான்செட்’ வெளியிட்டுள்ள எண்ணிக்கையை மறுதலித்துள்ள உலக சுகாதார அமைப்பு இந்த எண்ணிக்கை வீடு வீடாக சென்று எடுக்கப்பட்டது என கூறியுள்ளது. மேலும் அறிக்கை கூறும் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாகவும் கூறுகிறது. ஆனால் இந்த ஆய்வை நடத்திய குழுவில் இடம்பெற்று இருந்த பேராசிரியர் பிரபாத் ஜா, தங்களுடைய அறிக்கை உண்மை நிலவரத்தை காண்பிக்கிறது என கூறியுள்ளார்.


விரைவாக சிகிச்சை கொடுத்தால் குணமாக கூடிய நோய் தான் மலேரியா. ஆனால் உயிரை காப்பாற்ற கூடிய சிகிச்சை பலருக்கு கிடைக்காமல் இருக்கிறது என்பதை தான் இந்த அறிக்கை பிரதிபலிப்பதாக உள்ளது.

Copyright © 2009 News and Entertainment All rights reserved.