ஈராக் தலைநகர் பாக்தாதில் கிருத்தவத் தேவாலயம் ஒன்றில் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்தவர்களை விடுவிக்க ஈராக்கிய இராணுவத்தினர் அதிரடி முயற்சியில் இறங்கியதில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டதாக உதவி உட்துறை அமைச்சர் மேஜர் ஜெனரல் உசைன் கமால் தெரிவித்தார். இத்தாக்குதலில் ஆயுததாரிகள் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
தேவாலயம் ஒன்றில் பிற்பகல் ஆராதனைக்காகக் குழுமியிருந்த கிட்டத்தட்ட 100 பேர் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள தமது அல்-கைடா சகாக்களை விடுவிக்குமாறு தீவிரவாதிகள் கோரிக்கை விடுத்தனர்.
இத்தாக்குதலை நடத்தியவர்கள் ஈராக்கியர்கள் அல்லர் எனவும், வெளிநாட்டைச் சேர்ந்த அரபுக்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 1700 மணிக்கு பெரும் குண்டுச் சத்தமும் பின்னர் துப்பாக்கிச் சூடுகளும் கேட்டதாக பாக்தாதின் கராடா மாவட்டத்து மக்கள் தெரிவித்தனர்.
ஈராக்கின் பங்குச் சந்தைக் கட்டடத்தை முதலில் தாக்கிய தீவிரவாதிகள் பின்னர் அருகில் இருந்த கத்தோலிக்கத் தேவாலயத்தினுள் நுழந்தனர் என்றும் அங்கிருந்த காவலாளிகள் சிலருடன் நடந்த மோதலில் சில காவலாளிகள் உயிரிழந்தனர் என்றும் காவல்துறை தெரிவித்தது.
இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் தேவாலயத்தைச் சூழ்ந்து அதிரடித் தாக்குதலை நடத்தத் தொடங்கினர். ஆலயத்தினுள் இடண்டு குண்டுச் சத்தங்கள் கேட்டதாகவும், துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தீவிரவாதிகள் கிரனைட்டுகளை எறிந்ததாகவும், தற்கொலைக் குண்டுகளை வெடிக்க வைத்ததாகவும் தெரிகிறது.
6 தீவிரவாதிகள் உட்பட 52 பேர் கொல்லப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். இவர்களில் பொதுமக்களும் பாதுகாப்புப் படையினரும் அடங்குவர். 56 பொதுமக்கள் காயமடைந்தனர்.
ஈராக்கில் அரை மில்லியன் கிறித்தவர்கள் வசித்து வருகின்றனர். 2003 அமெரிக்கத் தாக்குதல்களை அடுத்து ஈராக்கிய கிறித்தவர்கள் பெருமளவில் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
Showing posts with label Crime. Show all posts
Showing posts with label Crime. Show all posts
Shocking CCTV Of Car Crashing
13:12 News Portal Labels: Crime
Shocking CCTV Of Car Crashing Into Clubbers
Fourteen people were taken to hospital after the stolen Saab saloon mounted the pavement and hit clubbers outside Dali bar in Rochdale.
Officers said it was lucky nobody was killed in the collision, which took place at 2.10am on Sunday, October 17.
Witnesses told Sky News that two men were asked to leave the bar because they were "behaving in a disorderly way".
It is understood they then drove the car at the doormen.
Police are still hunting suspect Lee Bradley, 26, and have searched more than 80 addresses since the incident.
Lee Bradley and the Dali bar
They said anyone sheltering him would also be arrested.Detective Inspector Chris Walker, of Rochdale CID, added: "I want Bradley and anyone who knows where he might be to look at this CCTV footage and think long and hard about how serious this offence is."The footage clearly shows the driver of the car recklessly driving into a large group of people and, without exaggeration, it is fortunate no one was killed."We desperately need to speak to Bradley about this incident and will not rest until we find him.
Police said it was lucky nobody died in the crash
அமெரிக்கா தாக்கப்படும்! இஸ்ரேல் உளவாளி பரபரப்பு தகவல் - டிச. 28-2009
13:58 News Portal Labels: Crime
27-10-2010_ல் தற்போது நடந்த அமெரிக்காவுக்கான விமானத்தில் வெடிப்பொருட்கள் இருந்ததை
கடந்த 28-12-2009_ல் சொன்ன இஸ்ரேலின் உளவாளியின் பரபரப்பு தகவல்
டெல் அவிவ், டிச. 28-2009 ஜுவல் அவிவ் இஸ்ரேல் பிரதமர் கோல்டா மெய்ராவின் மெய்க்காப் பாளராக இருந்தவர்.
முனிச்சில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற சமயம் பாலஸ்தீன பிணைக் கைதிகளால் இஸ்ரேலிய தடகள வீரர்கள் கொல்லப்பட்டனர்.அந்த சம்பவத்தை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக கோல்டா மெய்ராவால் நியமிக்கப் பட்டவர். தடகள வீரர் களின் படுகொலைக்கு சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனையையும் வாங்கித் தந்தவர். இந்தப் படுகொலைக்கான கண்டனத்தையும், விசாரணையையும் இஸ்ரேல் தன் நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொண்டது.
முனிச்சில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற சமயம் பாலஸ்தீன பிணைக் கைதிகளால் இஸ்ரேலிய தடகள வீரர்கள் கொல்லப்பட்டனர்.அந்த சம்பவத்தை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக கோல்டா மெய்ராவால் நியமிக்கப் பட்டவர். தடகள வீரர் களின் படுகொலைக்கு சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனையையும் வாங்கித் தந்தவர். இந்தப் படுகொலைக்கான கண்டனத்தையும், விசாரணையையும் இஸ்ரேல் தன் நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொண்டது.
ஜுவல் அவிவ் லண்டன் ரயில்வே சுரங்கப்பாதை வெடி குண்டு சம்பவத்தை முன் கூட்டியே கணித்தார். லண்டன் மாநகர போலீசார் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தி ருந்தபோதும் லண்டன் சுரங்க வெடிகுண்டு சம்பவம் நடந்தது. ஜுவல் அவிவ் முன்னரே கண்டுபிடித்து கூறியபோது கேலியும், கிண்டலும் செய்யதார்களாம்.
ஜுவல், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளிலிருந்து இரட்டை கோபுரம் தாக்கப்படலாம் என்ற செய்தியை அமெரிக்க (புஷ்) அராசங்கத்திடம் கொடுத்தார்.ஆனால் இந்தக் கணிப்பையொட்டி அமெரிக்க அரசாங்கம் பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை செய்யவில்லை.
ஜுவல், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளிலிருந்து இரட்டை கோபுரம் தாக்கப்படலாம் என்ற செய்தியை அமெரிக்க (புஷ்) அராசங்கத்திடம் கொடுத்தார்.ஆனால் இந்தக் கணிப்பையொட்டி அமெரிக்க அரசாங்கம் பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை செய்யவில்லை.
News Proof Here: http://www.abovetopsecret.com/forum/thread294173/pg1 , http://urbanlegends.about.com/od/errata/a/juval_aviv.htm
இதன் விளைவாக இரட்டை கோபுரம் ஒரு மாதத்திற்கு பிறகு தகர்க்கப்பட்டது.ஜுவல் தனது அறிக்கையில் தீவிரவாதிகள் விமானம் அல்லது குண்டுகளின் உதவியுடன் அமெரிக்காவின் அதிக முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களையோ அல்லது நினைவுச் சின்னங்களையோ தாக்கலாம் என விவரமாக கூறியுள்ளார். அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்ட மாதிரியாகவே இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது. இந்த சம்பவம் நடைபெற்றதிலிருந்து தனது நாட்டு பாதுகாப்புக்காக ஓரு தொகையை வாடகையாக பாதுகாப்பு ஆலோசனை நிறுவனத்திற்கு அமெரிக்கா வழங்கி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் மீது தீவிரவாதிகளால் மற்றுமொரு தாக்குதல் அடுத்த சில மாதங்களில் நடத்த வாய்ப்பு இருப்பதாக ஜுவல் அவிவ் கூறியுள்ளார்.2001 விமான கடத்தலையே மக்கள் மறக்க முடியாத நிலையில், தீவிரவாதிகள் மீண்டும் ஒரு விமான கடத்தலை நடத்த நினைக்கமாட்டார்கள்.
அதாவது வெடிகுண்டுகளில் உலோகம் இருக்கும் என நம்புகிறோம். ஆனால் தீவிரவாதிகள் அதிக திறன் வாய்ந்த பிளாஸ்டிக் தொழில் நுட்பத்துடன் கூடிய வெடிகுண்டுகளை பயன்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Proof Here http://pledgeamerica.org/blog/2009/10/juval-avivisraeli-agent-speaks-out
அமெரிக்கா தாக்கப்படும்! இஸ்ரேல் உளவாளி பரபரப்பு தகவல்
Comments : ஆஹா எவ்வளவு அருமையாக பாம் வைக்கிறத முன்னாடியே சொல்லிருக்காங்க... Sorry, Sorry எவ்வளவு அருமையாக யாரோ பாம் வைக்கப்பொறத முன்னாடியே சொல்லிருக்காங்க... Realy Great yaa
அமெரிக்கா தாக்கப்படும்! இஸ்ரேல் உளவாளி பரபரப்பு தகவல்
Comments : ஆஹா எவ்வளவு அருமையாக பாம் வைக்கிறத முன்னாடியே சொல்லிருக்காங்க... Sorry, Sorry எவ்வளவு அருமையாக யாரோ பாம் வைக்கப்பொறத முன்னாடியே சொல்லிருக்காங்க... Realy Great yaa
அமெரிக்காவுக்கான விமானத்தில் வெடிப்பொருட்கள்
13:13 News Portal Labels: Crime
அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட பார்சல் ஒன்றை துபாயில் வழிமறித்து சோதித்ததில் அதில் வெடிப்பொருட்கள் இருந்ததாகவும், இதில் அல் கையிதா ஈடுப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் தெரிவதாக துபாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதே போன்று பிரிட்டனின் ஈஸ்ட் மிட்லேண்ட்ஸ் விமான நிலையத்திலும் பார்சல் ஒன்று வெடிப்பொருட்களுடன் பிடிக்கப்பட்டுள்ளது.
துபாயில் பிடிக்கப்பட்டுள்ள பார்சலில் பி.ஈ.டீ.என் என்ற வெடிமருந்து இருந்துள்ளது. இதே வெடிமருந்து தான் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டெட்ராய்ட்க்கு சென்ற விமானம் ஒன்றில் வெடிக்க வைக்க முயற்சிக்கப்பட்டது.
வெள்ளிகிழமையன்று துபாய் மற்றும் பிரிட்டனில் பிடிக்கப்பட்ட இரு பார்சல்களுமே யெமனில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற சரக்கு விமானத்தில் இருந்தன. இந்த பொருட்களுக்கும் அரேபிய பகுதியில் இயங்கி வரும் அல் கையிதாவுக்கும் தொடர்பு இருக்கும் என புலனாய்வு அதிகாரிகள் எண்ணுகின்றனர்.
இந்த இரு பார்சல்களுமே சிகாகோ பகுதியில் இருக்கும் யூதர்களின் வழிப்பாட்டு மையங்களுக்கு முகவரியிட்டு அனுப்பப்பட்டுள்ளன.
யூ.பி.எஸ். பெடெக்ஸ் சரக்கு விமானங்களில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பார்சல்களை தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விமான நிலையங்களில் யெமனில் இருந்து வரும் பொருட்களை சோதித்து வருகின்றனர்.
இதற்கிடையே பிரிட்டனில் பிடிப்பட்ட பொருள் தொடர்பாக கருத்து தெரிவித்த பிரிட்டனின் உள்துறை செயலரான தெரஸா மே, இது வெடிக்க வைக்க கூடிய உபகரணம் தானா என்று நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தாங்கள் பல்வேறு தகவல்களை ஆராய்ந்து வருவதாகவும், யெமனில் இருந்து தான் பார்சல்கள் வந்துள்ளது என்பது தங்களுக்கு தெரியும் என்றார். அதே போன்று அரபிய தீபகற்ப பகுதியில் இயங்கி வரும் அல் கையிதா, எம்முடைய நாட்டில், எம்முடைய குடிமக்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடுவது தங்களுக்கு தெரியும் என்றும் கூறினார்.
இந்த பார்சல்கள் பிடிப்பட்டதற்கு சவுதி அரேபியா கொடுத்த தகவலே காரணம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. பிரிட்டனின் ‘டெய்லி டெலிகிராப்’ செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தியில் யெமனுக்கு பொறுப்பான எம்.ஐ.6 அதிகாரிக்கு இந்த பார்சல்கள் குறித்த தகவல்கள் வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, யெமன் அதிகாரிகள் இருபதுக்கும் அதிகமான சந்தேகத்துக்கு இடமான பார்சல்களை பறிமுதல் செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
யெமனில் இருந்து அனுப்பப்படும் ஆட்கள் கூட வராத பார்சல்களை தனது வான்வெளியில் அனுமதிக்க போவதில்லை என பிரிட்டன் அறிவித்துள்ளது.
அமெரிக்க விமானத்தில் குண்டுகள் கண்டுபிடிப்பு
13:04 News Portal Labels: Crime
ஏமனிலிருந்து அமெரிக்கா செல்ல இருந்த விமானத்தில் வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.
ஏமன் நாட்டில் இருந்து புறப்பட்டு பிரிட்டனில் தரையிறங்கி, பின்னர் அமெரிக்காவின் சிக்காகோ நகருக்குச் செல்லவிருந்த விமானத்தில், தொலைதூரத்தில் இருந்து இயக்கவல்ல குண்டு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்காவின் பிரபலமான, மற்றும் சர்வதேச அளவில் சேவையாற்றும் யு.பி.எஸ் பார்சல் சர்வீஸ் விமானத்திலேயே இக்குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பிரிட்டனின் மிட்லன்ஸ் பகுதியில் தரையிறங்கிய விமானத்தில், இக்குண்டுகள் இருப்பதைக் கண்டறிந்த அதிகாரிகள், உடனே குண்டைச் செயலிழக்கச் செய்யும் நிபுணர்களை வரவழைத்து அக்குண்டுகளை செயலிழக்கச் செய்தனர்.
இதுபோன்ற மற்றுமொரு குண்டு துபாயில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
பிரிட்டன் வந்த அமெரிக்க விமானத்தை, பாதுகாப்புப் பிரிவினர் வழக்கம்போலச் சோதனை செய்ததபோது தற்செயலாக இது கண்டுபிடிக்கப்பட்டது.
ஏமன் நாட்டில் இருந்து புறப்பட்டு பிரிட்டனில் தரையிறங்கி, பின்னர் அமெரிக்காவின் சிக்காகோ நகருக்குச் செல்லவிருந்த விமானத்தில், தொலைதூரத்தில் இருந்து இயக்கவல்ல குண்டு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்காவின் பிரபலமான, மற்றும் சர்வதேச அளவில் சேவையாற்றும் யு.பி.எஸ் பார்சல் சர்வீஸ் விமானத்திலேயே இக்குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பிரிட்டனின் மிட்லன்ஸ் பகுதியில் தரையிறங்கிய விமானத்தில், இக்குண்டுகள் இருப்பதைக் கண்டறிந்த அதிகாரிகள், உடனே குண்டைச் செயலிழக்கச் செய்யும் நிபுணர்களை வரவழைத்து அக்குண்டுகளை செயலிழக்கச் செய்தனர்.
இதுபோன்ற மற்றுமொரு குண்டு துபாயில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
![]() |
| துபாயில் பிடிப்பட்ட பார்சல் |
வேலைக்கு அழைக்கும் மோசடி இ மெயில்கள்!
12:18 News Portal Labels: Crime
விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் எந்த அளவிற்கு வளர்கிறதோ அதற்கேற்ப மோசடி செய்பவர்களும் தங்களது மோசடி முறைகளை மாற்றிக்கொள்கிறார்கள்.
அந்த வகையான மோசடிகளில் ஒன்றுதான் வேலை தருவதாக கூறி வரும் மோசடி இ மெயில்கள்.
வங்கியிலிருந்து கேட்பதாக கூறி வங்கி கணக்கு எண் மற்றும் ரகசிய எண்ணை கேட்பது, "உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது; அதனை அனுப்பி வைப்பதற்கான கூரியர் செலவு மற்றும் டாக்குமெண்ட் கட்டணமாக இவ்வளவு தொகையை கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் செலுத்துங்கள்..." என்பதுமாதிரியான மெயில்களை அனுப்பிக்கொண்டிருந்தவர்கள், அவை மோசடியானது என்பது தெரியவந்துவிட்டதால், தற்போது தங்களது யுக்தியை மாற்றிக்கொண்டு, வேலை தேடுபவர்களை குறிவைக்கிறார்கள்.
இதுநாள் வரை பேருந்துகளிலும், ரயில்களிலும் பிட் நோட்டீஸ் அடித்து ஒட்டி, அதில் " பிரபல அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களுக்கு படித்த மற்றும் படிக்காத ஆட்கள் தேவை. மாதச் சம்பளம் 10,000 முதல்..." என்று வாயை பிளக்க வைக்கும் தொகையை குறிப்பிட்டு, முகவரி எதையும் தெரிவிக்காமல், செல்போன் எண்ணை மட்டும் தெரிவித்திருப்பார்கள்.
அதைப்பார்த்து ஏமாந்து தொடர்புகொள்பவர்களிடம், ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி, 10,000 சம்பளத்திற்கு 10,000 டெபாசிட் கட்ட வேண்டும், 20,000 என்றால் அதற்கேற்ற தொகை என்று கூறி, லம்பாக ஒரு தொகையை கறந்துகொண்டு கம்பி நீட்டி விடுவார்கள்.
இத்தகைய நபர்கள்தான் இப்பொழுது புது அவதாரம் எடுத்து, தங்களது மோசடிகளை அரங்கேற்ற தொடங்கியுள்ளனர்.
ஏதோ ஒரு வகையில், எப்படியோ இ மெயில் முகவரிகளை திரட்டிக்கொள்ளும் இத்தகைய மோசடி பேர் வழிகள், பிரபலமான கம்பெனி பெயரில் , ஏகப்பட்ட பதவிகளின் பெயர்களை குறிப்பிட்டு, வேலைக்கு ஆட்கள் தேவை என்றும், உங்களுக்கு ஏற்ற வேலைக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதி சான்று, வேலை அனுபவம் முகவரி அத்தாட்சி, சம்பள பட்டியல் போன்றவற்றை அனுப்புங்கள் என்று கூறி ஒரு போலியான தனிநபர் மெயில் ஐடி கொடுத்திருப்பார்கள்.
கூடவே மிக முக்கியமாக, வேலைக்கான நேர்முக தேர்வுக்கு வருவதற்கு செக்யூரிட்டி டெபாசிட் தொகை கட்ட வேண்டும் என்று கூறி ஒரு தொகை குறிப்பிடப்பட்டிருக்கும். அத்துடன் அதை செலுத்துவதற்கான வங்கி கணக்கும் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதை உண்மையென நம்பி பணம் போட்டால் அவ்வளவுதான்.பணத்தை எடுத்துக்கொண்டு, அந்த வங்கிக்கணக்கையே "குளோஸ்" செய்துவிட்டு கம்பி நீட்டிவிடுவார்கள்.
பொதுவாகவே இத்தகைய மெயில்கள் மோசடியானவை என்பதை, அதில் காணப்படும் சில பொதுவான ஏமாற்று வேலைகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
முதலில் பிரபல கம்பெனி என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக, குறிப்பிட்ட பிரபல நிறுவனத்தின் பெயரோடு துணை வார்த்தைகளையும் சேர்த்திருப்பார்கள்.
பிரபாகரன் மீதான ராஜிவ் கொலை வழக்கு தள்ளுபடி
16:16 News Portal Labels: Crime
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த புலித் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டுஅம்மான் ஆகியோரது மரணம் குறித்து இலங்கை அதிகாரிகள் அளித்த தகவல்களில் திருப்தியடைவதாக சி.பி.ஐ., தெரிவித்தது. இதையடுத்து, அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, வழக்கை கைவிடுவதாக, "தடா' சிறப்பு கோர்ட் அறிவித்துள்ளது.
இந்திய சட்டப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் இறந்துவிட்டால், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தள்ளுபடி செய்யப்படும். அந்த அடிப்படையில், பிரபாகரன் மரணத்தை உறுதிப்படுத்தும் வகையில், அவரது மரணச் சான்றிதழை வழங்கும்படி, இலங்கை அரசை இந்தியா கேட்டுக்கொண்டது. ஆனால், அதுபோல எந்த சான்றிதழும் வழங்கப்பட்டதாக தகவல் இல்லை.
"தடா' சிறப்பு நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி, "பிரபாகரனும், பொட்டு அம்மானும் இறந்துவிட்டதாக, புலன் விசாரணை ஏஜன்சியால் நிரூபிக்க இயலும் என இக்கோர்ட் நம்புகிறது. அதன் அடிப்படையில், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, வழக்கை கைவிட உத்தரவிடப்படுகிறது' என, உத்தரவிட்டுள்ளார். மேலும், தொடர்ந்து விசாரணை நடத்தி, விசாரணையின் முன்னேற்றம் குறித்து அடிக்கடி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணமடைந்து விட்டதாக, இந்திய அரசு முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
லேப்-டாப் திருடனை விரட்டி பிடித்த மாற்றுத் திறனாளி
16:08 News Portal Labels: Crime
மதுரையில் லேப்-டாப் திருடி, தலைமறைவானவரை நான்கு மாதங்களுக்குப் பின், விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தார், மாற்றுத் திறனாளி கோபிகண்ணன்.
போலியோ பாதித்த மாற்றுத் திறனாளியான இவர், மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்தவர். மாநில, தேசிய, சர்வதேச அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்று 50க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றவர். இதற்காக, அரசு 2003ல் தொகுப்பூதியத்தில் பணி வழங்கியது. மதுரை கலெக்டர் அலுவலக பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஷாப்பிங் காம்பிளக்சில் பாதுகாப்பு பணியில் உள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன், இங்குள்ள கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றில் லேப்-டாப் திருடு போனது. அதை திருடியவரை கோபிகண்ணன் பிடிப்பதற்குள் தப்பி விட்டார்.
இந்நிலையில், நேற்று காலை அதே நபர் அங்கு நடமாடினார். ஏற்கனவே, தப்பிய நபரைப் போலவே இருந்ததால், அவரை விசாரித்தார் கோபி கண்ணன். அவர் முரணான பதில் கூறவே, அவரை மீண்டும் பிடிக்க முயன்றார். சுதாகரித்த அந்த நபர், அவரை தள்ளிவிட்டு ஓடினார்.இதை எதிர்பாராத கோபிகண்ணன், தனது டூவீலரில் மதிச்சியம் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று, இரு போலீசாரை அழைத்துக் கொண்டு திருடனை விரட்டினார். அந்த நபர் ஓட்டம் பிடிக்கவே, போலீசார் விரட்டிப் பிடித்தனர். விசாரணையில், அவர் அனுப்பானடியைச் சேர்ந்த சந்தனகுமார் (29) என தெரிந்தது. தல்லாகுளம் போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்
இராக்கிய அதிகாரிகளின் சித்ரவதைகள்
15:33 News Portal Labels: Crime
விக்கிலீக்ஸ் இணையதளம் கிட்டதட்ட 4 லட்சம் அமெரிக்க இராணுவ ரகசிய பதிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த பதிவுகள் மூலம் இராக்கிய அதிகாரிகளின் சித்ரவதைகள் பற்றி தெரிந்து இருந்தும் அமெரிக்க இராணுவத்தினர் அதனை கண்டுகொள்ளவில்லை என அறிய வருகிறது. அத்தோடு அமெரிக்க இராணுவத்தின் சோதனை சாவடிகளில் பல நூற்றுக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பதிவுகள் கூறுகின்றன.
மேலும் பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்த ஆவணங்கள் கைவசம் இருந்தும், அவ்வாறு எவ்வித ஆவணமும் இல்லை என அமெரிக்கா முன்னர் மறுத்து வந்ததும் தெரிய வருகிறது. இராக் மீது போர் தொடுத்த பின்னர் பலியானவர்களின் எண்ணிக்கையானது 1,09,000 என்றும், அவற்றில் 66,081 பேர் பொதுமக்கள் என்றும் இப்போது அறிய வருகிறது.
ஆனால் இந்த தகவலை எல்லாம் நிராகரித்துள்ள அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம், இதெல்லாம் மேலோட்டமான தகவல்கள் என கூறியுள்ளது. மேலும் சித்ரவதை மற்றும் முறைகேடான நடவடிக்கை இருந்தால், அவை குறித்து புகார் செய்தால் நடவடிக்கை எடுப்பதை தாங்கள் கோட்பாடாகவே வைத்திருப்பதாகவும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லண்டனில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனரான ஜூலியன் அஸாங்கே, ஒவ்வொரு நாளும் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான இந்த பதிவுகள், இந்த போரால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை பிரதிபலிப்பாக கூறினார். மேலும் தினம் தினம் ஒன்று அல்லது இரண்டு பேர் கொல்லப்படும் சின்ன சின்ன சம்பவங்களின் ஒட்டு மொத்தமான எண்ணிக்கை தான் இது என்றும் கூறினார்.
இந்த பதிவுகள், தினந்தோறும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும், சின்ன தாக்குதல்கள் என்று வர்ணிக்கப்படும் சம்பவங்களால் ஏற்படும் பாதிப்புகளை காட்டுவதாக விக்கிலீக்ஸுடன் இணைந்து பணி புரியும் ‘இராக் பாடி கவுண்ட்’ அமைப்பின் ஜான் ஸ்லபோடா கூறினார்.
அமெரிக்கா விசனம்
![]() |
| ஹிலரி கிளிண்டன் |
ஆனால் மிகவும் தணிக்கை செய்து வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணத்தால் எந்த ஒரு ஆபத்தும் வரப்போவதில்லை என தெரிவித்துள்ள விக்கிலீக்ஸ், இந்த ஆவணங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலை கொண்டு சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க போவதாகவும் கூறியுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள பதிவுகளில் ஒன்றில், டலஃபார் நகரத்தில் இராக்கிய இராணுவத்தினர் நபர் ஒருவரை கொன்றது தொடர்பான காட்சிநாடா அமெரிக்க இராணுவத்தினரிடம் கொடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுப்பட்டவர்களில் ஒருவரின் பெயர் கூட அமெரிக்க இராணுவத்தினரிடம் கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
மற்றுமொரு சம்பவத்தில் நபர் ஒருவரின் விரல்களை வெட்டி எடுத்த இராணுவத்தினர், அந்த நபரை பின்னர் அமிலத்தில் வீசி கொன்றுள்ளனர்.
இது போல இன்னும் ஏராளமான சித்ரவதை தொடர்பான பதிவுகள் வெளியாகியுள்ளன.
அதேபோன்று, அமெரிக்க படைகளால் வெளியில் இதற்கு முன்னர் சொல்லப்படாத ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்களும் இந்த பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்க ஆக்கிரமிப்பு போர் குறித்த 391,832 இரகசிய ஆவணங்கள்
12:23 News Portal Labels: Crime
ஈராக் மீது அமெரிக்க ஆக்கிரமிப்பு போர் குறித்த 391,832 ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் நேற்று வெளிட்டுள்ளது இதில் 2004 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் வரையான காலத்தில் அமெரிக்கா உலகிற்கு மறைத்துள்ள ரகசியங்கள் கொண்டது எனினும் 2004ஆம் ஆண்டு மே மாதம் மற்றும் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாத சம்பவங்கள் உள்ளடக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது (except for the months of May 2004 and March 2009)
விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இரகசிய ஆவணங்களில் பிரகாரம் 2004 தொடக்கம் 2009 ஆண்டு வரையுள்ள 6 ஆண்டுகளில் ஈராக்கில் 109,032 பேர் கொல்லப்பட்டுள்ளனர் இவர்களின் 60 வீதமானவர்கள் பொது மக்கள் என்று விக்கிலீக் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு உதவும் ஈராக் பொம்மை நிர்வாகத்தின் படைகள் அமெரிக்க சித்திரவதை களுக்கு மேலதிகமாக மிக மோசமான சித்திரவதைகளை ஈராக் மக்கள் மீது மேற்கொண்டு வருகின்றமையும் அந்த சித்திரவதை எதையும் அமெரிக்க படைகள் கண்டு கொள்வதில்லை என்பதையும் விக்கிலீக் இரகசிய ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன
இந்த இரகசிய ஆவணத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகள் மேற்கொண்ட 271171 தாக்குதல்கள், 104272 போராளிகளின் தாக்குதல்கள், 128693 குண்டு வெடிப்புகள் ,1328 தமக்கு தாமே தாக்கி கொண்டமை Friendfly Fire பற்றிய தகவல்கள் அடங்களாக பல தலைப்புகளில் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது, அமெரிக்க வரலாற்றில் வெளியான மிகப் பெரிய இரகசியமாக இது கருதப்படுகின்றது நேரடியாக இவற்றை பார்வையிட இங்கு கிளிக் செய்யவும்
கொலை வழக்கில் சவூதி இளவரசருக்கு 20 ஆண்டு சிறை
13:53 News Portal Labels: Crime
சவூதி இளவரசருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சவூதி இளவரசரான சவுத் அப்துல் அஜிஸ் பின் நாசர் அல் சவுத் தன்னுடய பணியாளரை கொலை செய்த வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தீர்ப்பு வழங்கிய நீதிபதி பீன் கூறுகையில், "ஒரு இளவரசர் தண்டனைக்கு உள்ளாவது வழக்கமாக இல்லாத ஒன்று. சட்டத்துக்கு அப்பாற்பட்டு இந்த நாட்டில் யாருக்கும் இடம் இல்லை.
சவூதி அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவரான உங்களுக்கு இதை விட கடுமையானதாகவோ அல்லது குறைவாகவோ தண்டனை வழங்குவது எனக்கு தவறான ஒன்றாகும்" என்றார்.
Subscribe to:
Posts (Atom)






