Feed

Showing posts with label Science. Show all posts
Showing posts with label Science. Show all posts

Technology 'Can't Beat PETN Bomb Threat'


Air security expert Kim O'Neil tells Jeff Randall Live technology is powerless to detect and defeat the threat from PETN bombs.

கனவைப் பதியலாம்

மனித மூளை
கனவுகளை மின்னியல் ரீதியாக பதிவு செய்து அதற்கு கற்பிதம் கூற தாம் திட்டமிடுவதாக ஒரு அமெரிக்க ஆய்வாளர் கூறியுள்ளார்.
கனவுகள் ஏன் ஏற்படுகின்றன எப்படி ஏற்படுகின்றன என்பதைக் கண்டறியப் பயன்படக் கூடிய மூளையின் உயர் மட்ட செயற்பாடுகளை பதிவு செய்வதற்கான முறைமை ஒன்றை தாம் கண்டுபிடித்துள்ளதாக Journal Nature scientists என்னும் சஞ்சிகையில் வெளியான கட்டுரையில் அவர் தெரிவித்துள்ளார். 

கனவுகளை பதிவு செய்யக் கூடிய ஒரு இயந்திரத்தை உருவாக்குவதற்கான நோக்கம் என்பது ஒரு அலாதியான விசயந்தான். ஆனால், கலிபோர்னியாவில் உள்ள ஆய்வாளர் குழு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்காவது அது எவ்வாறு சாத்தியம் என்பது குறித்து விளக்குகிறது.


ஒருவரது முளையின் கலங்கள் அல்லது நியூரோன்கள் ஒரு விடயத்துடன் அல்லது ஒரு கருத்தியலுடன் தொடர்புபட்டதாக இருப்பதாக அந்த ஆய்வாளர்களின் ஒரு ஆய்வு கூறுகிறது.

உதாரணமாக பரிசோதனைக்கு உட்படும் ஒரு தொண்டர், நடிகை மர்லின் மன்றோவை நினைக்கும் போது அந்த நினைப்புடன் தொடர்புடைய அவருடைய மூளையில் இருக்கும் நியோரோன் பற்றிக்கொண்டு ஜொலிக்கும்.

பரிசோதனைக்கு வந்த தொண்டர்களுக்கு தொடர்ச்சியான பல படங்களை காண்பித்தபோது, பல தரப்பட்ட விடயங்கள், பொருட்கள் மற்றும் கருத்தியலுடன் சம்பந்தப்பட்ட நியூரோன்களை ஆய்வாளர்களால் அடையாளம் காண முடிந்தது.

தூங்கும் தொண்டர்களின் மூளையின் அலைகளை புரிந்துகொள்வதும், அதில் இருந்து அவர்கள் காணுகின்ற கனவுகளை புரிந்து கொள்ள விழைவது என்பவைதான் ஆய்வாளர்கள் எடுக்கப்போகின்ற அடுத்த முயற்சியாகும்.

தரையிலும் தண்ணீரிலும் ஓடும் பைக்!

திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி புது தெருவை சேர்ந்த 22 வயதான முஹம்மது தஃபீக் அலி இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிகல் இன்ஜினியரிங் படிப்பபை இந்த ஆண்டு முடித்துள்ளார். இறுதி ஆண்டு படிப்பிற்காக ஒரு ப்ராஜக்ட் செய்ய நினைத்த முஹம்மது தஃபீக் அதை ஒரு சாதனையாக செய்ய வேண்டும் என திட்டமிட்டார்.
தரையிலும் தண்ணீரிலும் ஒடும் பஸ் மற்றும் சைக்கிள்கள் தொழில்நுட்பத்தில் முன்னேரிய நாடான அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் ஏற்கனவே இருக்கின்றது எனவே‘எரவாஞ்சேரியில் இருக்கும் நாம் புதுமையாக தண்ணீரிலும் தரையிலும் ஓடும் ஸ்கூட்டரை தயாரிப்போம்’ என முடிவு செய்த முஹம்மது தவ்ஃபீக் 6 மாத காலத்தில் தனது இந்த கனவை நினைவாக்கி தற்போது சாதனை படைத்துள்ளார்.

அவருக்கு சொந்தான எம்எய்ட்டி பைக்கை வைத்து இந்த புதிய கண்டுபிடிப்பை அவர் தயாரித்துள்ளார். இதற்கு அவருக்கு ஆன செலவு ரூபாய் 6 ஆயிரம் மட்டும் தான்!
தண்ணீரில் சுமார் 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் இந்த பைக்கை தரையிலும் ஓட்டிக்க கொள்ளலாம்.
தனது கண்டுபிடிப்பை எருமைப்பட்டியில் உள்ள குளம் ஒன்றில் பொதுமக்கள் முன்னிலையில் ஓட்டிக்காட்னார் முஹம்மது தஃபீக்!
இவரது இந்த கண்டு பிடிப்பை பற்றிய செய்தி சன்நியுஸ், கலைஞர் போன்ற அனைத்து தொலைக்காட்சிகளிலும் மற்றும் தினகரன் தினதந்தி போன்ற அனைத்து நாளிதழ்களிலும் வெளியானது குறிப்பிடதக்கது.
இவரது இந்த சாதனை மற்ற மாணவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்
‘நம்ம ஊர்ல இருந்துகிட்டு என்னத்த செய்யமுடியும் என தங்களது இயலாமைக்கு வேறு பெயர் சூட்டிக் கொள்ளாமல் சாதனை செய்ய பணமோ வசதியோ நாம் வசிக்கும் ஊரோ ஒரு தடை அல்ல என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.
முஹம்மது தஃபீக் அப்படி நினைத்திருந்தால் அவரது இந்த கண்டுபிடிப்பு வெளிவந்திருக்காது. தண்ணிடம் இருந்த பழைய பைக், வெறும் 6 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அருகில் உள்ள குளம், இதுவே முஹம்மது தஃபீக் சாதனைக்கு போதுமானதாக இருந்துள்ளது.
தனது இந்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கோரி பதிவு செய்துள்ளதாக முஹம்மது தஃபீக் நம்மிடம் தெரிவித்துள்ளார்.
நமது மாணவர்களின் இது போன்ற சாதனைகள் தொடர வேண்டும்.

நிலவில் உப்பு, வெள்ளி, தண்ணீர் !











கடந்த ஆண்டு நாசாவின் ராக்கெட் ஒன்று நிலவில் மோதி ஏற்படுத்திய பள்ளம் தொடர்பான விரிவான தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
நாசாவின் ‘ல்க்ராஸ்’விண்வெளி திட்டத்தின்படி, நிலவின் தென்கோடியில் மிகவும் ஆழமான, இருட்டான பள்ளம் ஒன்றில் ராக்கெட் ஒன்று ஏவப்பட்டது.

இந்த பள்ளத்திற்குள் ஒரு போதும் சூரிய வெளிச்சம் பட்டதில்லை. மேலும் இந்த இடமானது சூரிய குடும்பத்தில் மிகவும் குளிர்ச்சியான பகுதி என்றும் எண்ணப்படுகிறது.

ராக்கெட் பள்ளத்தை தாக்கியவுடன், பள்ளத்தில் இருந்து புகை மற்றும் வாயுக்கள் வெளியாகின, இதனை ராக்கெட் பின்னாலே சென்ற விண்கலம் பதிவு செய்தது, பின்னர் அந்த தகவல்கள் ஆராய்ப்பட்டன.

ராக்கெட் மோதியவுடன் பெரும் புகை அல்லது பெரும் ஜாலம் ஏற்படும் என்று நினைத்து இருந்த ஆராய்ச்சியாளர்கள் அவ்வாறு இடம்பெறாத காரணத்தால் முதலில் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் ஆச்சரியங்கள் தங்களுக்கு காத்திருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் இப்போது தெரிவித்துள்ளனர்.

இந்த சோதனையில் தன்னுடைய கணிப்புகள் குறித்து அமெரிக்காவின் பிரவுன் பல்கலைகழகத்தின் பேராசிரியர் பீட்டர் ஷுல்ஸ் ‘சைன்ஸ் திஸ் வீக்’ என்ற சஞ்சிகையில் குறிப்பிட்டுள்ளார். இதில் அந்த பள்ளத்தின் அடித்தளத்தில் தண்ணீர் மற்றுமன்றி இன்னும் ஏராளமான பொருட்கள் இருப்பதாக கூறியுள்ளார்.

கரியமிலவாயு, அமோனியா, உப்பு, வெள்ளி போன்றவை இங்கே இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு இப்போது கிடைத்திருக்கும் சூரிய குடும்பம் எப்படி உருவானது என்பதற்கான பதிலை கண்டுபிடிக்கவும் உதவலாம் என்று கருதப்படுகிறது.

Copyright © 2009 News and Entertainment All rights reserved.