Feed

பெருஞ்செலவு செய்து அவப்பெயர்

தில்லியில் நடந்துமுடிந்த 19-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளால் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு அவப்பெயரே ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.
 
இந்தப் போட்டிகளை நடத்துவது இந்தியாவின் தகுதிக்கு மீறிய செயல் என்றும், விளையாட்டுக்கு இவ்வளவு தொகையை செலவிடுவதை விட வறுமையை ஒழிக்க முன்னுரிமை அளிப்பதுதான் விவேகமான செயல் என்றும் கடுமையான விமர்சனங்களை இந்தியாவின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான மணிசங்கர் ஐயர் வெளியிட்டுள்ளார்.

எழுபதாயிரம் கோடி ரூபாய்களைச் செலவு செய்து நமக்கு நாமே அவப்பெயரைத் தேடிக்கொண்ட செயல்தான் இந்த விளையாட்டுப் போட்டிகளை இந்தியா நடத்தியது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டிகளில் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக அதிக பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

Copyright © 2009 News and Entertainment All rights reserved.