Feed

Showing posts with label Politics. Show all posts
Showing posts with label Politics. Show all posts

ஆர்.எஸ்.எஸ். க்கு தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்பு


ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் சகோதர அமைப்புகளுக்கு தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்பு இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி குற்றம் சாற்றியுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட சுற்றறிக்கையில், மேற்கூறிய குற்றச்சாற்றுக்கள் இடம்பெற்றுள்ளது.

சமீபத்தில் நடத்தப்பட்ட விரிவான விசாரணையில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் சகோதர அமைப்புகளின் உண்மையான குணாதிசியம் அம்பலமானதாகவும், இந்த அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடபட்டுள்ளது.

நாட்டின் கட்டமைப்பை தகர்க்கும் நோக்குடன் மதவாத மற்றும் தீவிரவாத சக்திகள் எதிலிருந்து உருவெடுத்தாலும், அதற்கு எதிராக என்ன விலை கொடுத்தேனும் காங்கிரஸ் கட்சி போராடும்.

மத துவேஷங்களை பரப்பும் மற்றும் மத அடிப்படையில் மக்களிடையே பிரிவினையை தூண்டும் அது போன்ற அனைத்து சக்திகளுக்கு எதிராகவும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி போராடும் என்று அந்த சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள், கூட்ட முடிவில் நிறைவேற்றப்பட்ட உள்ள தீர்மானங்களில் இடம்பெறக்கூடும் என்று தெரிகிறது.

மனித மலத்தை மனிதர்கள் அள்ளும் அவலம்

மனித மலம் வெற்றுக் கையால் அள்ளப்படுகின்றது
மலத்தை மனிதர்கள் அள்ளும்
 
மனித மலத்தை மனிதர்கள் அள்ளும் அவலம் இந்தியாவில் சட்டரீதியாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக அரசு கூறினாலும், பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் இன்னமும் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுவதாக கூறும் தலித் சமூகத்தினர் அதை முற்றாக ஒழிக்கக்கோரி புது தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
 
இந்தியா முழுவதிலிருந்தும் இந்திய தலைநகர் தில்லியில் திரண்ட ஆயிரக்கணக்கான மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாளர்கள், தங்களை இந்த இழிவான பணியிலிருந்து மீட்குமாறு இந்திய நடுவணரசுக்கு கோரிக்கைகளை முன்வைத்தனர். 

இந்தியாவில் மனித கழிவை மனிதர்கள் அள்ளும் நடைமுறை தேசிய அளவில் 1993ம் ஆண்டிலேயே சட்டரீதியாக ஒழிக்கப்பட்டாலும், இன்னும் பல மாநிலங்களில் இது தொடர்வதாக கூறுகிறார் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திய தேசிய துப்புரவுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவரான, பெசவாடா வில்சன். இந்த இழிவை சுமப்பவர்கள் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சமூகத்தின் மற்ற பகுதியினர் மத்தியில் இதை ஒழிப்பதில் அதிக அக்கறை இல்லை என்கிறார் அவர். 

எனவே, இந்திய அரசால் சட்டவிரோதமாக்கப்பட்ட மனித கழிவை மனிதர்களே அகற்றும் அவலத்தை முற்றிலுமாக ஒழிக்க அரசு அதிகபட்ச அக்கறை காட்டி குறிப்பிட்ட கால எல்லைக்குள் இதை ஒழித்து இதில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நடைமுறைகளை செயற்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார். 

சட்ட ரீதியாக தடை செய்யப்பட்ட இந்த அவலம், இந்தியாவில் பரவலாக தொடர்வதை ஒப்புக்கொள்கிறார் இந்திய நடுவணரசின் ஓய்வு பெற்ற அமைச்சரவைச் செயலர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன். பழமையில் ஊறிப்போன இந்திய சமூகத்தில் மாற்றங்கள் மிகவும் தாமதமாகவே ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.





10 ஆண்டுகளாக பட்டினிப் போராட்டம் நடத்தும் இரும்புப் பெண்மணி

மணிப்பூரைசசேர்ந்தவரஇரோமஷர்மிளஎன்பெண்மணி. ஆயுதப்படையினரசிறப்பஅதிகாரசசட்டத்தநீக்கக்கோரி 10 ஆண்டுகளாதனி நபராநின்றஉண்ணாநிலைபபோராட்டமநடத்தி வருகிறார்.

2000 ஆமஆண்டநவம்பர் 2ஆமதேதி மணிப்பூரமாநிலமமல்லோமஎன்இடத்திலஅஸாமதுப்பாக்கிபபடையினரநடத்திகாட்டுமிராண்டிததனமான 'என்கவுண்டரில்' ஒரநடுவயதபெண்மணி உட்பட 10 அப்பாவி மக்களசுட்டுககொல்லப்பட்டனர்.

அன்றைதினமஷர்மிலதனதஉண்ணாநிலைபபோராட்டத்தைததுவங்கினார், இரண்டநாட்களுக்குபபிறகஅவரதற்கொலமுயற்சி வழக்கிலகைதசெய்யப்பட்டார்.

ஆனாலஇவரஓராண்டசிறையிலவைக்கசசட்டமஉதவியது. ஓவ்வொரஆண்டமுடிவிலுமஇவரசிறையிலிருந்தவிடுவிக்கப்படுவார். ஆனாலஇவரவீட்டிற்குசசென்றஉற்றாரஉறவினர்களைபபார்ப்பதில்லை, ஆனாலதன்னுடைகோரிக்கையவலியுறுத்தி மீண்டுமபட்டினிப்போராட்டமசெய்வாரமீண்டுமகைதமீண்டுமபோராட்டமஎன்றஇவரதவாழ்வஇருந்தவந்துள்ளது,.

இவருக்காகவே.என். மருத்துவமனையிலஒரஅறசிறையாமாற்றப்பட்டுள்ளது . இந்தியாவில்தானஇவருக்ககைதவரவேற்பு. ஆனாலதெனகொரியஇவருக்கஅவர்களநாட்டினஉயர்ந்மனிஉரிமவிருதைககொடுத்தகவுரவித்தது. சமீபத்திலஇவருக்கரவீந்திரநாததாகூரவிருதும், ூ.51 லட்சமரொக்கமுமஅளிக்கப்பட்டது. ஆனாலஇவரபணத்திற்காபோராட்டமநடத்துமசாதாரநபரஅல்ல.. எவ்வளவபேரவலியுறுத்தியுமஇவரதனதபட்டினிபபோராட்டத்தைககைவிடுவதாயில்லை.

இவரதபோராட்எதிரொலியால் 2004ஆமஆண்டஆகஸ்ட் 12ஆமதேதி மணிப்பூரஅரசு 7 சட்டமன்றததொகுதிகளிலிருந்தஆயுதப்படசிறப்பஅதிகாரசசட்டத்தரத்தசெய்தது. ஆனாலஇதற்கெல்லாமஇவரமசியவில்லை. அதாவதஇந்அடாவடிசசட்டமமுற்றிலுமஒழிக்கப்படவேண்டுமஅதவரஎனபோராட்டமஓயாதஎன்றஇவரபட்டினிப்போராட்டத்தைததொடர்ந்தவருகிறார்.

ஆனாலஇந்தசசட்டத்தவாபஸபெற்றாலமீண்டுமபோராளிகளஅல்லதபிரிவினைவாதிகளஓங்குமஎன்றமறுத்தவருகிறது.

இவரபட்டினிப்போராட்டம் 10-வதஆண்டைததொட்டுவிட்டதால், ஜஸ்டபீஸஃபவுண்டேஷனஎன்அமைப்பஇவரகௌரவிக்முடிவசெய்துள்ளது.

நவம்பரமுதலவாரத்திலகாங்கிரஸதலைவரசோனியகாந்தி மணிப்பூரசெல்கிறார். அப்போதஇவரஷர்மிலாவைசசந்திக்முயற்சி செய்கிறாரஎன்பதைபபொறுத்திருந்தபார்ப்போம்.

அரசியல்வாதிகளின், போலிகளினபோலி உண்ணாநிலைபபோராட்டத்தைபபார்த்தபார்த்தமனமவெதும்புமஉண்மையாகுடிமகன்களுக்கஷர்மிலாவினபோராட்டமஒரதைரியத்தஅளிக்குமஎன்றநம்பலாம்.

ஒரமாநிலத்தினஅடக்குமுறையஎதிர்த்தஒரதனி நபரஅதுவுமஒரபெண்மணி ஒற்றையாளாநின்றஅறப்போராட்டமநடத்துவதகாந்தி தேசமாஇந்தியாவுக்கபெருமசேர்க்குமவிஷயமஎன்பதஒரபுறமிருக்க,

காந்தி எதிர்த்ததஅன்னிசக்திகளை, ஆனாலஇன்றஇந்இரும்புபபெண்மணி எதிர்ப்பதநமஉள்நாட்டஆதிக்கசசக்திகளஎன்பதநம்மசிந்திக்கததூண்டுமஒரவிஷயமாகபபார்க்அறிவுறுத்துகிறது.

ஹேட்லி குறித்த தகவல்: இந்தியாவுக்கு ஏமாற்றம்


புதுதில்லி, அக்.28- இந்திய நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள டேவிட் ஹேட்லி குறித்த தகவல்களை பெறுவதில் இந்தியாவுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை கூறியுள்ளார்.

எனினும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் டிமோதி ஜெ ரோமர், "மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு முந்தைய காலத்தில் இருந்தே தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பாக இந்தியாவுக்கு தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் தகவல்களை அளித்து வந்தோம். மும்பை தாக்குதலுக்கு பின்னரும் தொடர்ந்து தகவல்களை வழங்கி வருகிறோம்." என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், ஹேட்லி தொடர்பாக பயனுள்ள தகவல்களை பெறுவதில் இந்திய புலனாய்வு ஏஜென்சிகளுக்கு ஏமாற்றம்தான் ஏற்பட்டுள்ளது என்று ஜி.கே. பிள்ளை கூறியுள்ளார்.

அணு இழப்பீடு சட்டம்: அமெரிக்கா அஞ்சுவது ஏன்?

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வருவதற்கு முன்னர், இந்தியாவின் நாடாளுமன்றம் நிறைவேற்றிய அணு விபத்து இழப்பீடு சட்டத்தில் தங்களுக்கு வசதியான மாற்றத்தைச் செய்துவிட வேண்டும் என்ற உறுதியுடன் இந்தியா வந்த அமெரிக்கக் குழு, அது அவ்வளவு சாதாரணமாக நடந்துவிடாது என்பதை அறிந்து ஏமாற்றமடைந்துள்ளது.

இந்தியாவின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையடுத்து ‘உரிய’ மாற்றங்களுக்குப் பின்னரே அணு விபத்து இழப்பீடு சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டது. பல நாட்கள் நடந்த தீவிரமான விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்ட்ட ஒரு சட்டத்தை, இந்திய அரசுடன் ஒரு ‘இணக்கமான பேச்சுவார்த்த’யின் மூலமதங்களுக்கு வசதியாக மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்துவந்த அந்நாட்டின் அயலுறவு அமைச்சகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான கூடுதல் செயலர் வில்லியம் ஜே.பர்னஸ் தலைமையிலான குழு, அது நிறைவேறாது என்பதைப் புரிந்துகொண்டு, இந்தியா நிறைவேற்றியுள்ள அணு விபத்திற்கான கூடுதல் இழப்பு தொடர்பான பன்னாட்டு பிரகடனத்திற்கு உடன்பாடற்றது என்று கூறியுள்ளது.

பன்னாட்டு அணு சக்தி முகமையால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய அணு விபத்து தொடர்பான கூடுதல் இழப்பீடு பிரகடனம், அந்த பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள நாடு ஒன்றில் அணு விபத்து ஏற்பட்டால், அதனால் பாதிக்கப்படும் அனைவருக்கும் கூடுதல் இழப்பீடு (அந்த நாட்டின் சட்டத்திற்குட்பட்டு அளிக்கப்படும் இழப்பீட்டையும் தாண்டி) அளிக்க இந்தப் பிரகடனம் வழி செய்கிறது. இதில் கையெழுத்திடத் தயார் என்று இந்தியா உறுதியளித்துள்ளது. அதில் இப்போதும் சிக்கல் ஏதுமில்லை என்று இந்திய அரசு கூறுகிறது.

ஆனால் சிக்கல் எங்கிருக்கிறது என்றால், அணு விபத்து ஏற்பட்டால் அந்த அணு உலையை விற்ற நிறுவனம் இழப்பீட்டிப் பொறுப்பிற்கு உடபடுத்தும் இந்திய அணு விபத்து இழப்பீடு சட்டத்தின் 17(பி) பிரிவே. இந்தப் பிரிவை நீக்க வேண்டும் என்று அமெரிக்கா வற்புறுத்துகிறது. அதாவது அணு விபத்து இழப்பீட்டில் அமெரிக்க நிறுவனங்களை பொறுப்பாக்காதே என்கிறது!

அதனால்தான் அணு விபத்து இழப்பீடு வழங்குவதற்கு பன்னாட்டு கூடுதல் இழப்பீடு பிரகடனத்தைப் பற்றிப் பேசுகிறது. அது கூடுதல் இழப்பீடு தொடர்பானது மட்டுமே, அணு விபத்து ஏற்பட்டால், அந்த அணு உலையை தயாரித்து விற்ற நிறுவனத்தின் பொறுப்பென்ன? அதுதான் இந்திய அரசு கேட்கும் கேள்வி. அந்தப் பொறுப்பில் இருந்து தயாரிப்பாளர் என்ற முறையில் அணு உலையை விற்ற நிறுவனம் தனது இழப்பீடு பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டு வெளியேறிவிட முடியாது. இதுதான் அமெரிக்காவிற்கு, அதாவது அதன் அணு உலை தயாரிப்பு நிறுவனங்களுக்கு கசக்கிறது.

அமெரிக்காவின் முன்னணி அணு உலை தயாரிப்பு நிறுவனங்களான வெஸ்டிங்ஹவுஸ், ஜெனரல் எலக்டிரிக் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே இது தொடர்பாக பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் பேசியுள்ளன. அப்போது, அணு விபத்து நடந்தால் அதில் தங்களுக்கு எந்த இழப்பீடு பொறுப்பும் இருக்கக் கூடாது என்றும், அதற்கான பாதுகாப்பு (Insulation from Damage Claim) வேண்டும் என்றும் கோரியதாக செய்திகள் கூறுகின்றன.

இஸ்லாமிய வங்கி முறையை இந்தியாவில் செயல்படுத்த பிரதமர் ஆவல்

இஸ்லாமிய வங்கி முறையை இந்தியாவில் செயல்படுத்த பிரதமர் ஆவல்

மலேஷியாவில் நெடுங்காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இஸ்லாமிய வங்கி முறைக் குறித்து ஆய்வு செய்து, அதனை இந்தியாவில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தி பார்க்கும்படியும், அதனை அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முனைய வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

வட்டியில்லா வங்கி முறையான இஸ்லாமிய வங்கியை இந்தியாவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கிக்கு பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மலேஷியாவில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் நேற்று அந்நாட்டு பிரதமர் முஹம்மது நஜிப் துன் அப்துல் ரஜாக்கை சந்தித்து, பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல் குறித்து விரிவாகப் பேசினார். இந்த பேச்சு வார்த்தையின் பயனாக, இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்துக் கொள்ள முடிவானது. இந்த ஒப்பந்தம் 2011 ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி கையெழுத்தாகிறது.

மலேஷியாவில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து அறிய இந்தியா விரும்புகிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், மலேஷிய அரசு நடத்தி வரும் இஸ்லாமிய வங்கி செயல்படும் முறையைப் போன்று, இந்தியாவிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறி வருகின்றனர். இதுபற்றி ஆராயுமாறு மத்திய ரிசர்வ் வங்கியை கேட்டுக் கொண்டுள்ளேன். மிகப் பிரமாண்ட முறையிலான இந்த வங்கியின் செயல்பாடு என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. மலேஷியாவில் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வதையும் வரவேற்கிறேன் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

காஷ்மீர் குறித்த கருத்தை கூறிய அருந்ததி ராய் மீதும் தேச ‌விரோத வழக்கு‌க்கு அனுமதி


காஷ்மீர் குறித்து தெரிவித்த கருத்தை எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததிராய் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் இருந்ததில்லை. இது வரலாற்று உண்மை. இந்திய அரசுக்கும் இது தெரியும் என கருத்தரங்கு ஒன்றில் அருந்ததிராய் பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தியாவின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததிராய், இதுபோன்று பொறுப்பற்ற வகையில் கருத்து தெரிவிப்பது உண்மையில் எதிர்பாராதது என அகில இந்திய காங்கிரஸ் க‌ட்‌சி உறுப்பினர் சத்ய பிரகாஷ் மாலவியா தெரிவித்தார்.

அவரது கருத்து இந்தியாவையும், சர்வதேச சமூகத்தையும் தவறாக வழிநடத்தும் என்பதால் வரலாற்று உண்மைகளுக்கு மாறான அக்கருத்தை திரும்பப் பெற வேண்டும் என சத்ய பிரகாஷ் வலியுறுத்தினார்.


இதை பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. தேச விரோதமாகப் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் அருண் ஜேட்லி வலியுறுத்தினார்.

இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் எந்தச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்வது என்பது குறித்து டெல்லி காவ‌ல்துறை‌யின‌ர் ஆலோசித்து வருகின்றனர்.

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவில்லை: அருந்ததி ரா‌ய்

''ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஒருபோதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவில்லை'' எ‌ன்று பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததி ராய் தெரிவித்து‌ள்ளா‌ர்.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தது குறித்து அரு‌ந்த‌தி ரா‌ய் பே‌சிய பே‌ச்சு சர்ச்சையானதை‌த் தொட‌‌ர்‌ந்து, தற்போது இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில் சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கு ஒன்றில் அருந்ததி ராய் உரையாற்றினார். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஒருபோதும் இருக்கவில்லை. இது வரலாற்று உண்மை. இந்திய அரசும் இதை ஏற்றுக்கொண்டுள்ளதாக அருந்ததி ராய் அப்போது குறிப்பி‌ட்டு‌ள்ளா‌‌ர்.

பெருஞ்செலவு செய்து அவப்பெயர்

தில்லியில் நடந்துமுடிந்த 19-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளால் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு அவப்பெயரே ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.
 
இந்தப் போட்டிகளை நடத்துவது இந்தியாவின் தகுதிக்கு மீறிய செயல் என்றும், விளையாட்டுக்கு இவ்வளவு தொகையை செலவிடுவதை விட வறுமையை ஒழிக்க முன்னுரிமை அளிப்பதுதான் விவேகமான செயல் என்றும் கடுமையான விமர்சனங்களை இந்தியாவின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான மணிசங்கர் ஐயர் வெளியிட்டுள்ளார்.

எழுபதாயிரம் கோடி ரூபாய்களைச் செலவு செய்து நமக்கு நாமே அவப்பெயரைத் தேடிக்கொண்ட செயல்தான் இந்த விளையாட்டுப் போட்டிகளை இந்தியா நடத்தியது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டிகளில் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக அதிக பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

மத மோதலுக்கு வித்திடுகிறதா மசூதி ஒலி பெருக்கி?


பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து நடைபெற்ற மும்பை கலவரத்திற்கு பின்னர் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவதை ஓரளவு குறைத்துக் கொண்டிருந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே, கடந்த சில தினங்களாக இஸ்லாமியர்களை சீண்டத் தொடங்கியுள்ளார்.

கடந்த வாரம் மும்பை நகரிலுள்ள சாந்தாகுரூஸ் என்ற இடத்தில் அமைந்திருக்கும் மாநகராட்சி மருத்துவமனை ஒன்றில், இரண்டரை மாத ஆண் குழந்தை ஒன்று கடத்தப்பட்டது. இது குறித்து குழந்தையை பறிகொடுத்த பெண், காவல்துறையில் அளித்த புகாரில், பர்தா அணிந்த பெண் ஒருவர்தான் தனது குழந்தையை கடத்திச் சென்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாராம்.

இது குறித்து செய்தி வெளியானதுமே, அதனை வகையாக பிடித்துக்கொண்டார் தாக்கரே.

இது தொடர்பாக தனது கட்சி பத்திரிகையான "சாம்னா" வில், "குழந்தையை திருடுவதற்கு பர்தா பயன்படுத்தப்படுகிறது எனில் சட்டப்படி அதைத் தடை செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் "பர்தா" வையும், உடல் முழுவதையும் மறைக்கும் வகையிலான ஆடைகளையும் தடை செய்துள்ள பிரான்ஸ் அரசை வெகுவாக பாராட்டியிருந்த தாக்கரே, பர்தாவை தடைசெய்து ஒரு புரட்சிகரமான நடவடிக்கையை பிரான்ஸ் அதிபர் சர்கோஸி எடுத்துள்ளதாகவும் புகழாராம் சூட்டியிருந்தார்.

பால் தாக்கரேவின் இந்த கருத்து மற்ற பத்திரிகைகளிலும் வெளியாக மும்பை இஸ்லாமியர்களிடையே இலேசாக முணுமுணுப்பு கிளம்பத் தொடங்கியது.

அதே சமயம் மும்பை கலவரத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டதால், அதற்கு பின்னர் மும்பையில் வசிக்கும் இஸ்லாமியர்களும் சரி, இந்துக்களுக்கும் சரி, கலவரத்திற்கு பிறகு நடந்த எத்தனையோ - 2008 ல் நடந்த தாக்குதல் உள்பட - குண்டுவெடிப்புகளுக்கு பின்னரும் உணர்ச்சிவசப்படாமல் மிக பக்குவமாக பிரச்சனையை அணுகி, மிகுந்த மன முதிர்ச்சியுடன் நடந்துகொண்டனர்.

அதே சமயம் தாக்கரே போன்றவர்களும் அடக்கியே வாசித்தனர்.அதிலும் சமீபத்தில் அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் அலாகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்னர், ஒட்டுமொத்த இந்தியாவுமே ஒருவித பதற்றத்தில் இருந்தது என்றால், மும்பையில் அந்த பதற்றம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. "மீண்டும் ஒரு கலவரத்தை மும்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டு விடுமோ? " என்ற கவலை இருதரப்பு சமூக தலைவர்களிடமுமே குடிகொண்டிருந்தது.

ஆனால் தீர்ப்பு வெளியான பின்னர் அப்படியான ஒரு சம்பவம் ஏதும் நடந்துவிடாமல் மும்பைவாசிகள் மிக கவனத்துடன் நடந்துகொண்டது, ஒட்டுமொத்த இந்தியாவையுமே மூக்கின் மேல் விரலை வைக்க வைத்தது.

இப்படியான ஒரு சூழ்நிலையில்தான் மீண்டும் திரி கொளுத்த தொடங்கியுள்ளார் தாக்கரே. கடந்த சில வருடங்களாக பாலிவுட் "கான்" நடிகர்களின் பாகிஸ்தான் பற்று குறித்து மட்டும் காட்டம் காட்டி வந்த அவர், இப்போது நேரடியாகவே இஸ்லாமிய சமூகத்தினர் பின்பற்றும் சில மதச் சம்பிரதாயங்கள் பொது பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளது என்று பந்தம் கொளுத்தியுள்ளார்.

கடந்த வாரம் இஸ்லாமிய பெண்கள் அணியும் "பர்தா" உடைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று திருவாய் மலர்ந்திருந்த நிலையில், தற்போது மசூதிகளின் மேல் கட்டப்பட்டிருக்கும் ஒலி பெருக்கிகளால் அக்கம் பக்கம் வசிப்பவர்களுக்கு, குறிப்பாக வீட்டில் பாடம் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, மிகுந்த இடைஞ்சல் ஏற்படுவதாகவும், ஆனால் காவல் துறை அவர்கள் மீது வழக்கு ஏதும் போடாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தனது "சாம்னா" பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், அண்மையில் மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் நடந்த சிவசேனாவின் தசரா பொதுக்கூட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஒலி பெருக்கிகளில் இருந்து வெளியான ஒலி, நிர்ணயிக்கப்பட்ட டெசிபல் அளவைவிட கூடுதலாக இருந்ததாக வழக்குப் பதிவு செய்த காவல்துறைக்கு, மும்பை நகரில் உள்ள ஆசாத் மைதானம், பெண்டி பஜார் மற்றும் பெரம்பாடா போன்ற இடங்களில் உள்ள மசூதிகளில் கட்டப்பட்டிருக்கும் ஒலி பெருக்கிகளிலிருந்து வெளியாகும் அதிக அளவு சப்தத்தினால், அப்பகுதிகளில் வசிக்கும் இதர சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இரவில் தூங்க முடியாமல் தொல்லை ஏற்படுவதையும், குழந்தைகள் பாடம் படிக்க முடியாமல் அவதிப்படுவதையும் அறியமுடியவில்லையா?

அந்த ஒலி பெருக்கிகளை கட்டிய மசூதி நிர்வாகத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தாதர் சிவாஜி பார்க்கில் நடைபெற்ற தசரா பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கும் முன்னர், ஒலி பெருக்கியின் சப்தம் மும்பை உயர் நீதிமன்றம் வரையறுத்த 50 டெசிபல் அளவுக்குள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்த காவல்துறை.

ஆனால் அன்றைய கூட்டத்தில் ஒலி பெருக்கியிலிருந்து வெளிப்பட்ட சபதத்தின் அளவு 50 டெசிபலை தாண்டியதோடு, சிவசேனாவின் கர்ஜனையை யாராலும் அடக்கவோ அல்லது அமுக்கவோ முடியாது என்று பால் தாக்கரே பகிரங்கமாக சவாலும் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறியதாக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த சிவசேனா நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்தது காவல்துறை.

இதனை தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ள தாக்கரே, "சட்டவிரோதமாக மும்பையில் வந்து குடியேறி இருப்பவர்களது ( பங்காளதேஷ் முஸ்லிம்கள்) மசூதியின் ஒலி பெருக்கியிலிருந்து வெளிவரும் சப்தம் 500 டெசிபலை தாண்டி காதை கிழிக்கிறது. அதனை காவல்துறை வேடிக்கை பார்க்கிறது.

சட்டம் எங்களுக்கும் தெரியும். அதனை யாரும் எங்களுக்கு கற்றுத்தர வேண்டாம்; எங்களது உணர்வுகளை சட்டம் உணர்ந்துகொண்டால், பின்பு நாங்களும் சட்டத்தை மதிப்போம்" என்று மேலும் காட்டம் காட்டியுள்ளார்.

ர‌ஜினியின் கடவுள் யார்?

ர‌ஜினியை அவரது ரசிகர்கள் தங்களது கடவுளாக நினைத்து அலகு குத்தி கொண்டாடுகிறார்கள். ஆனால் ர‌ஜினியின் கடவுள் யார்?

ராகவேந்திரர்? பாபா?.. நோ இவர்கள் எல்லாம் கிடையாது. பால் தாக்கரேதான் ர‌ஜினியின் லேட்டஸ்ட் கடவுள்.

மும்பைக்கு ரோபோ பி‌ரிமியர் ஷோவுக்கு வந்த ர‌ஜினி பால் தாக்கரேயை சென்று சந்தித்தார். இவரது சிவசேனா மும்பைவாழ் தமிழர்களை அடித்து உதைத்து மும்பையிலிருந்து வெளியேற்றிய கதை எந்த தமிழனும் மறக்க முடியாதது.

தமிழர்கள் என்றில்லை, மற்ற மாநிலத்தவர்களின் கதையும் ஏறக்குறைய இதேதான். மராட்டியன் என்றால் மட்டுமே தாக்கரேக்களின் கூடாரத்தில் மதிப்பு.

பால் தாக்கரேயை சந்தித்துவிட்டு வந்த ர‌ஜினி, என்னுடைய பெற்றோர்கள் மராத்தியர்கள், மராத்தி படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்று கூறியதாகவும், தாக்கரே எனக்கு கடவுள் மாதி‌ரி என உணர்ச்சி வசப்பட்டதாகவும் சில இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Copyright © 2009 News and Entertainment All rights reserved.