ஏமன் நாட்டில் இருந்து புறப்பட்டு பிரிட்டனில் தரையிறங்கி, பின்னர் அமெரிக்காவின் சிக்காகோ நகருக்குச் செல்லவிருந்த விமானத்தில், தொலைதூரத்தில் இருந்து இயக்கவல்ல குண்டு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்காவின் பிரபலமான, மற்றும் சர்வதேச அளவில் சேவையாற்றும் யு.பி.எஸ் பார்சல் சர்வீஸ் விமானத்திலேயே இக்குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பிரிட்டனின் மிட்லன்ஸ் பகுதியில் தரையிறங்கிய விமானத்தில், இக்குண்டுகள் இருப்பதைக் கண்டறிந்த அதிகாரிகள், உடனே குண்டைச் செயலிழக்கச் செய்யும் நிபுணர்களை வரவழைத்து அக்குண்டுகளை செயலிழக்கச் செய்தனர்.
இதுபோன்ற மற்றுமொரு குண்டு துபாயில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
![]() |
| துபாயில் பிடிப்பட்ட பார்சல் |


